டோக்கியோ:
ஜப்பானை சூறாவளி புயல் தாக்கியுள்ளதால், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.ஜப்பானின், டோக்கியோ மற்றும் ஒகினாவா பகுதிகளை, "ஜிலாவத்' என்ற புயல் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக, 144 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
இதனால், பல்வேறு இடங்களில் மரங்களும், விளக்கு மற்றும் சிக்னல்
கம்பங்களும் தெருக்களில் சாய்ந்தன.மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.