தமிழகம்

நாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

ஞாயி, 08/13/2017 - 17:07 -- Velayutham
நாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

நாளை சுதந்திர தின விழா
ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

சென்னை, ஆக, 14- சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்ப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தியா முழுவதும், நாளை சுதந்திர தின விழா கோலகலாமாக கொண்டாப்பட உள்ளது. தமிழகத்திலும், சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான பணியை ,டிஜிபி டி.கே. ராஜேந்திரன் முடுக்கி விட்டுள்ளார். சென்னையில், போலீஸ் கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் மேற்பார்வையில், 10 ஆயிரம் போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது. ரயில் நிலையங்களில் கேட்பாரற்று பொருள் கிடந்தால், அவற்றை யாரும் எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், அனைத்து ரயில்களும் தீவிர சோதனைக்கு பிறகே இயக்கப்படுகிறது. பயணிகள் கொண்டு வரும் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையங்கள் பலத்த பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், ரிப்பன் மாளிகை, அரசு மருத்துவமனைகள் , சினிமா தியேட்டர்கள், நட்சத்திர ஓட்டல்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோட்டை, விமான நிலையம் ஆகியவை பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Undefined

நாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.

ஞாயி, 08/13/2017 - 16:49 -- Velayutham
நாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.

நாளை கோட்டைகொத்தளத்தில்
முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.
சென்னை ஆக 14.
நாளை கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கொடியேற்றகிறார்.

நாளை (15 ம் தேதி) நாட்டின் 70 வது சுதந்திரவிழா நாடு முழுவதும் கோலகலமாக
கொண்டாபடவுள்ளது.தமிழகத்தில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள்
தீவிரமாக நடைபெற்றுவருகிறது.கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியேற்றார். அரசுக்கு
பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் சமாளித்து கடந்த ஏழு
மாதங்களாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக செயலாற்றிவருகிறார்.சாதாரண விவசாய
குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக சென்னை புனித
ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைக்கிறார். அணி வகுப்பு
மரியாதையையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.
மாநிலத்தில் ஒமந்தூரார், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கோட்டை
கொத்தளத்தில் கொடியேற்றி வந்தனர். தற்போது சாதாரண நிலையிலிருந்து
உயர்ந்து முதல்வராகி உள்ள எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை காலை 8.30
மணிக்கு ஏற்றுகிறார்.

விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காலை 8.00 மணிக்கு
இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வருவார். அவரது காருக்கு
முன்னால் மாநகர போக்குவரத்து போலீஸார் இரு சக்கர வாகனங்களில்
அணிவகுத்து வருவார்கள்.
விழாவுக்கு வரும் முதல்வரை தலைமை செயலாளர் வரவேற்பார். அதனை தொடர்ந்து
முப்படைகளின் தென்பிராந்திய அதிகாரிகள், டிஜிபி , சென்னை மாநகர போலீஸ்
கமிஷனர்ஆகியோரை முதல்வருக்கு அறிமுகப்படுத்திவைப்பார்..இதனை தொடர்ந்து,
காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொள்வார்.
கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஏற்றி வைத்து மரியாதை
செலுத்துவார். பின்னர் மக்களிடையே சுதந்திர தின உரையாற்றுவார்.இதில்
முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
விழாவில், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதிகள்,
எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உட்பட பலர் கொள்வார்கள்.
சுதந்திதின விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பல்வேறு விருதுகள்
வழங்கப்படவுள்ளது.சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில்
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி ஒத்திகை நிகழ்ச்சி சென்னை
கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் கமாண்டோ படை, குதிரைப்படை,
காவலர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மாணவர், மாணவிகள் ஆகியோர்
ஒத்திகையில் பங்கேற்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி கடற்கரை
சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Undefined

அதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை அடித்து சொல்கிறார் தமிழசை.

சனி, 08/12/2017 - 22:43 -- Velayutham
அதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை அடித்து சொல்கிறார் தமிழசை.

அதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை
அடித்து சொல்கிறார் தமிழசை.
சென்னை ஆக 13.
அதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை என்று தமிழசை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்தார்.
தமிழக அரசியலில் உள்ள குழப்பங்களுக்கு பாஜக எந்தவிதத்திலும் காரணமல்ல.ஏதோ
அதிமுக அணிகள் பாஜக பின்னிருந்து பயமுறுத்திப் பணிய வைக்கிறது என்று
திருநாவுக்கரசர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதில்ல் அர்த்தமே
இல்லை.அவர் பாஜகவிலிருந்து சென்றவர்தான்ள.பாஜக நடைமுறைகள் பற்றி அவரும்
அறிந்த ஒன்றுதான்.தமிழகத்தில் ஆட்சி நிலையான ஆட்சியாக அமைய வேண்டும்
என்பதே பாஜகவின் நோக்கம்.எனவேதான் அதிமுக பிளவு இல்லாமல் ஒன்றுபடவேண்டும்
என்று விரும்புகிறது-.மத்திய,மாநில அரசுகளிடம் இணக்கம் தேவை என்றுதான்
நினைக்கிறோமே தவிர இயக்க நினைக்கவில்லை.இரண்டாக இருப்பவர்கள் இணைந்தால்
இரட்டை இலையும் கிடைக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.திமுக
செயல் தலைவர் ஸ்டாலின் குழப்பிய குட்டையில் மீன்பிடிக்கப்
பார்க்கிறார்.தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு
வருவதாகக் சொல்லும்போதே நம்பிக்கையின்மையோடு சொல்கிறார்.தற்போது மாநில
அரசுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இணைக்கமாக
செயல்படுகிறோம்.சென்ற முறை சட்டகிழிப்பு அரசியல் நடத்தி செய்திகளில்
வந்ததுபோல செய்திகளுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு பயன்படும்.நடைமுறை
சாத்தியமில்லை.தமிழகத்திற்க்கு தேசிய தலைவர் அமித் ஷா வருவது அரசியலில்
ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.காங்கிஸ்,திமுக ஆட்சியில்
கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிராக அவர்களே இன்று முரண்பட்டு பேசுவது
ஆச்சரியமாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.

Undefined

அதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்

சனி, 08/29/2015 - 22:59 -- Velayutham
அதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்

அதிமுக அமோக வெற்றி பெறும்
மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்

சென்னை, ஆக, 30

தமிழ்நாட்டின் மாநில அளவில் மக்கள் ஆய்வு நடத்திய கருத்துகணிப்பில் வரும் 2016 ம் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு அதிகரித்து வருவதாகவும், திமுக தலைவர் கருணாநிதியின் செல்வாக்கு சரிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ள 80 சட்டமன்ற தொகுதிகளில் வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் அடங்கிய மக்கள் ஆய்வு குழுவினர் பேராசிரியர் ராஜநாயகத்தின் வழிநடத்துதலில்படி கருத்து கணிப்பில் ஈடுபட்டனர். மக்களை நேரடியாக பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளை அடிப்படையாக வைத்தும், அப்பிரச்சனைகளை திறமையுடன் கையாண்டு, தீர்வு காணும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாட்டு முறையினையையும் அடிப்படையாகக் கொண்டு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.
அதிமுகவின் செயல்பாடு:
தமிழகத்தில் அளவிலாது இருந்த மின் தட்டுப்பாட்டை போக்க ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 65.1 சதவீதத்தினர் நன்று எனவும், பொது விநியோக திட்டங்களில் ஒழுங்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என 63.9 சதவீதத்தினரும், மக்கள் நலதிட்ட செயலாக்கம் சிறப்பாக உள்ளதாக 51.9 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். மக்கள் ஆய்வு குழுவினர் 2014 ம் ஆண்டு நடத்திய கருத்து கணிப்போடு ஒப்பிடுகையில் அதிமுகவில் சில அம்சங்களில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வேறு பல அம்சங்களில் குறிப்பிட தகுந்த அளவில் எந்த மாற்றமும் நிகழாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை 89 சதவீதத்தினர் வரவேற்று உள்ளனர். திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 73.6 சதவீதத்தினரை கவர்ந்து உள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மடிக்கணினி திட்டத்தை 72.8 சதவீதத்தினர் பாராட்டியுள்ளனர், முதியோர் உதவித் தொகை திட்டத்தை 69.7 சதவீதத்தினரும் வரவேற்று உள்ளனர், மலிவு விலை அம்மா உணவகத்தின் செயல்பாட்டினை 56.2 சதவீத்தினரையும் கவர்ந்துள்ளதாக அக்கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக அரசின் செயல்திறன் :
அதிமுக அரசு பொறுப்பேற்ற 2011 மே முதல் 2014 செப்டம்பர் வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக 59.1 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். பின் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தமிழக அரசின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை எனவும் தற்போது மீண்டும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு மீண்டும் அரசின் செயல்பாடுகள் திருப்திகர அளவை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2016 சட்ட மன்ற தேர்தல் வரை ஜெயலலிதாவின் தற்போதைய அணுகுமுறையே தொடர்ந்தால் பெருவாரியான இடங்களை வென்று அதிமுக ஆட்சியை தக்கவைக்கும் என 24.7 சதவீதத்தினரும், அதிமுகவுக்கும் திமுகவிக்கும் இடையே கடும் போட்டி நிலவும், கூட்டணி பலத்தை பொருத்தே முடிவு அமையும் என 26.2 சதவீதத்தினரும், திமுக வுக்கு ஆட்சி அமைக்கும் அளவு பெரும்பாண்மை கிடைக்காவிட்டாலும் அதிமுகவை விட அதிக இடங்களை வெல்லும் என 22.6 சதவீதத்தினரும், திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என வெறும் 8.3 சதவீதத்தினர் மட்டுமே தெரிவித்துள்ளதாக அம்முடிவுகள் அமைந்துள்ளன.
கூட்டணி மாறும் கட்சிகள் :
தேர்தலுக்கு தேர்தல் அரசியல் கட்சிகள் அணியை மாற்றி கூட்டணி வைத்துக் கொள்ளும் போக்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசியலில் இது சகஜம், பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என 58.1 சதவீதத்தினரும், கூட்டணிக் கட்சிகளின் அணுகுமுறைகளில் முரண்பாடுகள் வரும்போது அணிமாறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என 17.4 சதவீதத்தினரும், அரசியல் கட்சிகளுக்கு கொள்கை முக்கியமல்ல தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு என 12.8 சதவீதத்தினரும், அடிக்கடி அணி மாறும் கட்சிகளைத் தடைசெய்வது நல்லது என 8.2 சதவீததினரும் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியும் சமீபத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து இரு கட்சிகளின் கூட்டணிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என 37 சதவீதத்தினரும், அதற்கான சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாதென 23.1 சதவீதத்தினரும், கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லையென 13.9 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் முதல்வராக ஜெயலலிதா:
தற்போதைய அரசியல் சூழ்நிலையே தொடர்ந்து நீடித்தால் 2016 ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுக்கே அதிகப்படியான வெற்றி வாய்ப்பு இருப்பதாக 34.1 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர் அதற்கு அடுத்த படியாக திமுகவிற்கு 32.6 சதவீதம் வாய்ப்பும், தேமுதிகவிற்கு 4 சதவீத வாய்ப்பும், பாமாகவிற்கு 3 சதவீத வாய்ப்பும் இருப்பதாக அக்கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கருணாநிதி செல்வாக்கு சரிகிறது :
அரசியல் கட்சித்தலைவரின் தகுதி, திறமை, வாய்ப்பு அடிப்படையில் எந்த தலைவருக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான செல்வாக்கு உள்ளது என அறியப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா 31.56 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தும், யாரும் எதிர் பார்க்காத வகையில் திமுக கருணாநிதி 21.33 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திற்கும் அவருக்கு முன்னோடியாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஸ்டாலின் இரண்டாம் இடத்திலும் உள்ளார். இந்த முடிவை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது மக்கள் மத்தியில் கருணாநிதியின் செல்வாக்கு சரிவடைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Undefined

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்

திங், 01/12/2015 - 19:14 -- Velayutham
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற  தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்
 
 
 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். 
 
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில்  ஜல்லிக்கட்டை நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றும், இதற்காக மத்திய அரசுடன் தமிழக குழு டெல்லி செல்லும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் மத்திய அரசுடன் பேச நேற்று தமிழக கால்நடைத்துறை செயலாளர் விஜயகுமார்.இயக்குநர் ஆபிரகாம்.துணை இயக்குநர் ஆயூப்கான் உள்ளிட்ட அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.
Undefined

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.

சனி, 11/22/2014 - 18:27 -- Velayutham
தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.

Undefined

உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுநிலையாளர் நியமனம்.ஆளுனர் அவசர சட்டம்.

வியா, 11/20/2014 - 22:45 -- Velayutham
உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுநிலையாளர் நியமனம்.ஆளுனர் அவசர சட்டம்.

உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுநிலையாளர் நியமனம்.ஆளுனர் அவசர சட்டம்.

Undefined

அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டத்தில் பன்நோக்கு நவீன சிறப்பு அரசு மருத்துவமனை சேர்ப்பு

வியா, 11/20/2014 - 22:36 -- Velayutham
அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டத்தில் பன்நோக்கு நவீன சிறப்பு அரசு மருத்துவமனை சேர்ப்பு

அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டத்தில் பன்நோக்கு நவீன சிறப்பு அரசு மருத்துவமனை சேர்ப்பு

Undefined

2015 ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அரசு அறிவிப்பு.

வியா, 11/20/2014 - 22:23 -- Velayutham
2015 ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை  நாட்களாக அரசு அறிவிப்பு.

2015 ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அரசு அறிவிப்பு.

Undefined

பக்கங்கள்

Subscribe to RSS - தமிழகம்