பொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.

திங், 01/12/2015 - 19:18 -- Velayutham
சென்னை 13.
 
 
பொங்கல் பண்டிக்கைக்கு  அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும் என்று
அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று  கூட்டுறவுத்துறை அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ  தலைமையில்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அத்தியாவசியப்
பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்குதடையின்றி வழங்குவது குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது.எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள்
மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசி, மற்றும் பருப்பு எண்ணை போன்ற சிறப்பு பொதுவிநியோகத்திட்ட
பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், தங்குதடையின்றியும், சரியான அளவிலும், அனைத்து குடும்ப
அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக, 12.13.மற்றும் 14 ம் தேதிகளில்
அனைத்து பொதுவினியோகத்திட்ட பொருட்களும் மக்களுக்கு சிரமமின்றி வழங்குவதை அனைத்து களப்பணியாளர்களும்
நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்
இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும், பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாகவே, நியாயவிலைக் கடைகளில்
அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பெற்று பயனடைவார்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும்
அனைத்து நியாயவிலைக் கடைகளும், குறித்த நேரத்தில் திறக்கப்பட வேண்டும் , அனைத்து வேலை நாட்களிலும்,
அனைத்து பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யவேண்டும் , இதில் முறைகேடு
ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட விற்பனையாளர் மற்றும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை
மேற்கொள்ளவேண்டும் , கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கட்டுப்பாடற்ற
பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு கட்டாயப் படுத்தி விற்பனை செய்யக் கூடாது அத்தியாவசியப்
பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை களப்பணியாளர்கள் மூலம் ஆய்வு
செய்யப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது கூடுதல் பதிவாளர்கள்,
.ஆர்.எம்.ஜெயம்பாண்டியன், .கே.பாலமுருகன், ஜான் பீட்டர் அந்தோணிசாமி மற்றும் துறை அலுவலர்கள்
கலந்துகொண்டனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்