மஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது

சனி, 11/22/2014 - 18:35 -- Velayutham
மஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது
 
மஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் ஸ்போர்ட்ஸ் கார் மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு நேற்று டெல்லியில் அறிமுகபடுத்தபட்டது. இதன் சிறப்பு அம்சம் இதன் லுக் – அப்படியே போர்ஸ்ஹே கரெரா 911 காரை போல் உள்ளது. இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் செல்லலாம். அதற்க்கு ஒரு மணி நேரம் தான் பிடிக்கும். மேலும் இது அநாவசியமாக புகை வெளியிடுவதில்லை: எலக்டிரிக் கார்கள் மூலம் அதிகமான புகை வெளியேறுவதில்லை. முக்கியமாக பெட்ரோலிய பொருள்களில் இருந்து வெளியேறும் இணி2 மாசு வெளியிடபடுவதில்லை. இது போன்ற எலக்டிரிக் கார்களில் இருந்து வரும் புகையின் அளவு மிககுறைவு. அதுவும் இயற்கைக்கு ஏற்ற வகையிலேயே உள்ளது.
 
இதையெல்லாம் விட அவசரமாய் அடையாறில் இருந்து அம்பத்தூர் போகனும்னா அந்த 25 கிலோமீட்டருக்கு 15 நிமிஷம் சார்ஜ் போதும். இதன் வேகம் 0-100 கிலோமீட்டர் எட்டு வினாடிகளில் செல்ல முடியும். இது டூ சீட்டர் கார். இது இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் இந்திய ரோடுகளில் வரும் – விலை சுமார் 20 -28 லட்சம் வரை இருக்கும் என கணிக்கபடுகிறது.
Undefined
Tags: 
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்