சென்னையில் புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்

வெள், 01/10/2014 - 13:29 -- Velayutham
 
 
சென்னை, ஜன. 10–
 
இந்த ஆண்டு 37–வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
 
இந்த புத்தக கண்காட்சி 2 லட்சம் சதுர அடிபரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 800 ஸ்டால்கள் உள்ளன. 435 தமிழ் பதிப்பாளர்கள், 263 ஆங்கில பதிப்பாளர்கள், 59 தகவல் தொடர்பு பதிப்பாளர்கள் இந்த ஸ்டால்களில் பங்கேற்கிறார்கள்.
 
5 லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு புத்தகங்களும், கல்வி தொடர்பான சி.டி.க்களும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
 
வெளிமாநில புத்தக விற்பனையாளர்கள் 10 சதவீத கடைகளை அமைத்துள்ளனர். புதிய தலைப்புகளில் 2 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
 
தினமும் புத்தக வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக தினமும் சிறுகதை போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. 2–வது பரிசாக ரூ. 5 ஆயிரமும் 3–வது பரிசாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
 
சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகம் வாங்குவோருக்கு 10 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக்கண்காட்சி திறந்திருக்கும்.
 
புத்தக கண்காட்சிக்கு செல்பவருக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி வளாகத்தில் குடிநீர் வசதி கழிப்பிட வசதி, அவரச மருத்துவ வசதி, உணவு அரகங்கம், ஓய்வு எடுக்கும் வசதிகளும் உள்ளன.
 
குறும்பட காட்சி அரங்குகள், எழுத்தாளர்கள், வாசகர் சந்திப்பு அரங்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 1500 கார்கள், 5 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் வசதி உள்ளது.
 
பிரமாண்ட ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தக கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. 22–ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு 8 லட்சம் பேர் வந்தனர். 10 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு 10 லட்சம் பேர் வரலாம், ரூ. 15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்