புதுடெல்லி மாணவி பலாத்கார வழக்கு : நால்வரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

செவ், 09/10/2013 - 12:45 -- Velayutham
 
புதுடெல்லி செப் 11
 
 
புதுடெல்லி மாணவி பலாத்கார வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் என்று தீர்பளிக்கப்பட்டுள்ளது.
 
புதுடெல்லியில் கடந்த டிசம்பர் 13ம் தேதி ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில்  கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் துணை மருத்துவக் கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்தார்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு குற்றவாளி 17 வயதானவன் என்பதால், அவனது வழக்கை சிறார் நீதிமன்றம் விசாரித்து 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
4 பேர் மீதும் கடத்துதல், பலாத்காரம் செய்தல், கொலைக் குற்றம், துன்புறுத்துதல், ஆதாரங்களை மறைத்தல் உட்பட 13 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் நால்வரும் குற்றவாளிகள் என்றும் தில்லி நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது.
 
இதையடுத்து, தீர்ப்பினை நாளை அறிவிப்பதாக நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்