காவல் துறையை நவீனப்படுத்த 29 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு.

திங், 09/09/2013 - 10:34 -- Velayutham
 
 
காவல் துறையை நவீனப்படுத்த 29 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
 
 
பொது மக்களின் நலனையும்,  பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு காவல் துறையை வலுப்படுத்தும் நோக்கில்,
 
  , 4 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காவல் நிலையங்களுக்கான தகவல் தொடர்பு சாதனங்கள், 18 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள், 3 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  இதர நவீன தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன ஆயுதங்கள் என  மொத்தம் 29 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா  ஆணையிட்டுள்ளார்.
 
ராமநாதபுரம் மாவட்டம் ஒரு கூர் உணர்வு உள்ள மாவட்டம் என்பதால் இங்கு சட்டம் ஒழுங்கு சிறப்புற பராமரிக்க தடையில்லா செய்தி பரிமாற்றம் அவசியமானதாகும்.  தற்பொழுது, ராமநாதபுரம் மாவட்டம், அறங்காணலில் முழு மிக உயர் அலை புள்ளி விவர தகவல் மையத்திற்காக ஒரு முக்கிய திருப்பி வானொலி (சுநயீநயவநச ளுவயவiடிn)  செயல்பட்டு வருகிறது. மேலும், ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகம், பரமக்குடி காவல் நிலையம் மற்றும் ராமேஸ்வரத்தில் கைபேசி மற்றும் கையடக்க தகவல் பரிமாற்றத்தை அமைப்பதற்காக மூன்று பகுதி திருப்பி வானொலிகள் செயல்பட்டு வருகின்றன. அலைவரிசை ஒருங்கிணைப்பு வசதிக்காக, இத்திருப்பி வானொலிகள் அறங்காணலில் உள்ள முக்கிய திருப்பி வானொலியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் கமுதி மற்றும் திருவாடானை உபகோட்டங்களில் பயன்படுத்தப்படும் கைபேசி மற்றும் கையடக்க இணைப்பின் இயக்கத்திற்கு இத்திருப்பி வானொலிகள் மூலம்  சிறப்பான சேவை அளிக்க இயலவில்லை. 
 
           எனவே ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் கமுதியில் கைபேசி மற்றும் கையடக்க இணைப்பின் இயக்கத்திற்காக, இப்பகுதிகளில் திருப்பி வானொலி நிலையங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  இப்பகுதிகளில் திருப்பி வானொலி நிலையங்கள் அமைக்க முதல்வர் 1 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்
  தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 1,076 கி.மீ தூரத்திற்கு  கடற்கரை அமைந்துள்ளது, தமிழ்நாட்டிலிருந்து  அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுதல்  மற்றும் தமிழ்நாட்டிற்குள் சமூக விரோதிகள் கடல் வழியே ஊடுருவுவதைக்  தடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காகவும், கடற்கரையின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டும் முதல்வர் ஜெயலலிதா  1994 ஆம் ஆண்டில் முன்னோடி திட்டமாக கடலோரக் காவல் படை உருவாக்கப்பட்டது. 
  தற்போது கடலோரக் காவல் படையில் 12 கடல்சார் காவல் நிலையங்கள் மட்டுமே உள்ளன. இக்கடல்சார் காவல் நிலையங்கள் கடலோரப் பகுதிகளில் நுண்ணறிவுத் தகவல்களைச் சேகரித்து உள்ளூர் காவல் துறை, மீன்வளத் துறை, சுங்கத் துறை மற்றும் வருவாய் துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. கடற்கரையினை பாதுகாக்கும் பணியினை திறம்பட மேற்கொள்ளும் வகையிலும், கடலோர காவல் படைக்கு மேலும் வலுவூட்டும் வகையில் 30 கடல்சார் காவல் நிலையங்கள் அமைப்பதற்கும், 
30 நான்கு சக்கர வாகனங்கள், 60 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கடல்சார் 
காவல் நிலையங்களுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கும் 21 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு  நிர்வாகம் மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா   ஆணையிட்டுள்ளார்.
 
வேலூரில் இந்திய அரசின் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் காவலர்களுக்கான மருத்துவமனை மிகவும் பழமையானதாகவும், இடநெருக்கடியாகவும் உள்ளது.  இடவசதியின்மை காரணமாக அதிக அளவில் வருகைத் தரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க இயலாத நிலை உள்ளது.  எனவே, முதல்வர் ஜெயலலிதா  வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 3,000 காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு  பயனளிக்கும்  வகையில் 6,662 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் வேலூரில் காவலர்களுக்கென செயல்பட்டு வரும் மருத்துவமனைக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார்.
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்