உ.பி.யில் கலவரம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

ஞாயி, 09/08/2013 - 11:52 -- Velayutham
 
 
 
உத்தரபிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் நடந்த வகுப்பு கலவரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பதற்றம் நீடித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர். இந்த மோதலில், தொலைக்காட்சி ஒன்றின் பகுதிநேர நிருபர் ராஜேஷ் வர்மா, போலீஸ் புகைப்படக்காரர் இஸ்ரார் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
 
அவர்களில் சிலர் மருத்துவமனையில் இறந்தனர். இதனையடுத்து வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக 30க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். முஸாஃபர் நகர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது..
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்