முக்கிய விழாக்களின்போது வதந்திகளைத் தடுக்க செல்போன் குறுந்தகவல்களை முடக்க நடவடிக்கை

திங், 09/09/2013 - 08:26 -- Velayutham
மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடும் முக்கிய விழாக்களின்போது தேவையற்ற வதந்திகள் பரப்புவதை தடுக்க செல்போன் குறுந்தகவல்களை முடக்கிவைக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 தென்மாவட்டங்களில் முக்கிய தலைவர்களது நினைவு தினத்தின்போது அஞ்சலி செலுத்த, குறிப்பிட்ட இடத்துக்கு ஆயிரக்கணக்கானோர் சென்றுவருகின்றனர். 
 அவர்களில் பெரும்பாலானோர் வாடகை வாகனங்களில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிச் செல்லும்போது பிரச்னைகள் ஏற்பட்டு, அதனால் சட்டம், ஒழுங்கும் பாதிக்கப்படுகிறது. 
 இதையடுத்து, நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, சொந்த வாகனங்களில் மட்டுமே செல்லவேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
 ஆனால், வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கவேண்டும் என, குறிப்பிட்ட சமூக அமைப்புகளும், குறிப்பிட்ட அரசியல் கட்சியினரும் கோரி வருகின்றனர். 
 வதந்திகளை தடுக்க நடவடிக்கை: மேலும், குறிப்பிட்ட பெரிய நிகழ்ச்சிகளின் போது, தேவையற்ற வதந்திகளைப் பரப்பி, அமைதிக்கு சிலர் குந்தகம் விளைவிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. 
 இதையடுத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின்போது குறுந்தகவல்கள் செயல்பாட்டை முடக்கிவைக்க சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களை காவல் துறை சார்பில் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
 கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் குருபூஜையின்போது நடந்த துப்பாக்கிச்சூடு, கடந்த ஆண்டு சுதந்திóரப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையின் போது திருப்பாச்சேத்தி அருகே நடந்த மோதலில் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தியின் போது நடந்த கலவரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் அசம்பாவிதச் சம்பவங்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைள் எடுத்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்