மாநிலங்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

வியா, 06/27/2013 - 20:42 -- Velayutham
 
மாநிலங்களவைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 6  இடங்களுக்கான தேர்தலில் இன்று மதியம் 1.43 மணி அளவுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது.
 
மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 6 இடங்களுக்கான தேர்தலில், 7 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.
 
இன்று காலை 9 மணிக்கு முறைப்படி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கினாலும், காலை 11.25 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்து தனது வாக்கைப் பதிவு செய்யும் வரை யாரும் வாக்களிக்கவில்லை.
காலை 11.25க்கு முதல்வர் ஜெயலலிதா வாக்களித்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக வாக்களித்தனர்.1 மணி அளவில் அவைக்கு வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாக்கை அளித்தார். தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்கள் வாக்களித்தனர். பின்னர் மதியம் 1.10 மணி அளவில் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்து வாக்களித்தார்.
 
அவையில் வாக்களிப்பைப் புறக்கணித்துள்ள பாமக எம்.எல்.ஏக்களைத் தவிர மற்ற 231 எம்.எல்.ஏக்களும் தங்கள் வாக்கைப் பதிவு செய்துவிட்டனர். எனவே வாக்களிப்பு நிறைவடைந்தது. எனவே, இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்