இதற்கெல்லாம் எங்கள் கப்பல் ஆடாது :தேமுதிக கருத்து

புத, 05/29/2013 - 19:55 -- Velayutham
சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சாந்தி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம் தேமுதிக என்ற கப்பலில் இருந்த துரு உதிர்ந்து விட்டதாக தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக இணையதளமான ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:
 
 
தேமுதிகவில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் போய்விட்டார்கள். ஆனால் 60 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். 6 இலைகள் தான் உதிர்ந்துள்ளன. ஆனால் தேமுதிக என்ற ஆலமரம் தமிழகம் முழுவதும் வேரூன்றி பரவி வருகிறது. விஜயகாந்த் கைகாட்டினார் என்பதற்காக மட்டுமே முகம் தெரியாத சாந்தியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். அதற்கு அவர் காட்டும் விசுவாசம் இதுதானா
 
மிக பெரிய கப்பலில் துரு பிடித்த இடம் தானாக உதிர்வது போல தேமுதிக என்ற கப்பலில் இருந்து துரு உதிர்ந்து விட்டது. இதற்கெல்லாம் இந்த கப்பல் ஆடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்