அதிகாரிகளால் ஏமாற்றப்படும் தமிழக முதல்வர்…

வெள், 05/17/2013 - 17:34 -- Velayutham
 
தமிழக முதல்வர் அவர்களின் பார்வைக்கு
 
 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
 
   தமிழகத்தில் உள்ள அடிதட்டு மக்களை கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 24 மணி நேரமும் பணியாற்றி, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மக்கள்செய்திமையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
 
 இந்தியாவில், தமிழகத்தை முதன்மை மாநில மாற்றி சரித்திர சாதனைப்படைக்க வேண்டும் என்பதுதான் மக்கள்செய்திமையத்தின் விருப்பம்.
 
 மக்களுக்காக நான்…மக்களால் நான் என்ற குறிக்கோளோடு 24மணி பணியாற்றும் உங்களுக்கு, அதிகாரிகள் முழு ஒத்துழைப்பது கொடுப்பது இல்லை என்பது உண்மை.
 
  தமிழ
க அரசின் நிர்வாகத்தில் இருக்கும் பல அதிகாரிகள் இன்னும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவர் கருணாநிதியின் ஆதரவாளராக இருந்து, சரித்திர சாதனை படைக்க இருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வராகி தங்களுக்கும், அதிமுக ஆட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவர்களின் அடிமனதில் உள்ளது.
 
 அதிகா
ரிகளின் மோசமான, அலட்சியமான செயல்பாடுகள் தொடர்பாக சில உதாரணங்களை சுட்டிக்காட்டுவது மக்கள்செய்திமையத்திற்கு அவசியம்.
 
 *  14.5.13ம் தேதி அன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பத்திரிகையாளர் ஒய்வூதியம் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப ஒய்வூதியம் மாதம் ரூ1500 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் ஈராண்டு சாதனை விளம்பரத்தில் ஒய்வூதிய உயர்வு இடம் பெறவில்லை. 110 விதியின் நீங்கள் அறிவிப்பு வெளியிட்டதற்கு முந்தைய நிலைதான் விளம்பரத்தின் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் என்ன விள
க்கம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை.. செய்தி-மக்கள் தொடர்புத்துறையில் மட்டுமல்ல, பல துறைகளின் சாதனைகள் விளம்பரத்தில் இடம் பெறவில்லை. ஈராண்டு சாதனை விளம்பரத்தில் 14..5.13 வரை அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
 
 * திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ரவி நடத்தும் REAL VALUE PROPERTIES என்ற நிறுவனம் சென்னை அடையாறு எல்.பி சாலையில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட அனுமதி பெறுவதில் சிக்கல் இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் தற்போது செய்தித்துறை செயலாளராக இருக்கும் டாக்டர் எம். ராஜாராம் ஐ.ஏ.எஸ் அவர்களின் சிபாரிசில் சென்னை பெருநகரவளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் அனுமதி அளித்துள்ளார்.
  * தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சொசைட்டியில் திட்ட இயக்குநராக பணியாற்றி, ஒய்வு பெறும் சில மாதங்களுக்கு முன்பு பொதுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட சித்தரஞ்சன்மோகன்தாஸ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) எய்ட்ஸில் பல ஊழல்களை அரங்கேற்றினார். அதே போல் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநராக இருக்கும் ராஜா மீது இருந்த குற்றச்சாட்டு குறிப்பாணைகளை ஒரு வரியில் ரத்து செய்யப்பட்டு, கூடுதல் இயக்குநர் பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்தார் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் எஸ்.விஜயகுமார் ஐ.ஏ.எஸ். இந்த இரண்டு ஊழல் சம்பவங்கள் தொடர்பாக மக்கள்செய்திமையம் உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி2013ல் ரிட் மனுதாக்கல் செய்தது. சித்தரஞ்சன் மோகன்தாஸ் மற்றும் இணை இயக்குநர் ராஜா, சட்டத்துறை செயலாளர் ஜெயந்திரனிடம் அடைக்கலமானார்கள். சட்டத்துறை செயலாளர் ஜெயசந்திரனும், உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் சொக்கலிங்கமும் வாக்கிங் நண்பர்கள். மக்கள்செய்திமையம் தாக்கல் செய்த ஊழல் ரிட் வழக்குகள் இரண்டையும் நம்பர் ஆகாமல், வழக்கு விசாரணைக்கு வராதபடி தடுத்துவிட்டார்கள். இது தொடர்பாக இரண்டு முறை தலைமை நீதிபதி(பொறுப்பு) பெஞ்சில் ஒப்பன் கோர்ட்டில் நம்பர் ஆகாமல் இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டது. நீதிபதிகளும் நம்பர் ஆகும் என்று ஒப்பன் நீதிமன்றத்தில் கூறினார்கள். ஆனால் இது வரை அந்த வழக்குகள் நம்பராகவில்லை.
 
 
 
 
* ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநராக இருந்த ஜெகந்நாதன், தன்னுடைய பர்சனல் பதிவேட்டில், V.GOOD என்று இருந்ததை OUT STANDING என்று தானாகவே திருத்தி போர்ஜரி செய்துவிட்டார் என்று அடிப்படையில் விசாரணை நடந்து, குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு, இனி ஜெகந்நாதனை எந்த சென்சிடிவ் பதவியிலும் நியமிக்க கூடாது என்று திமுக ஆட்சியில் அரசு ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் அதே திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த வீரப்பாண்டி ஆறுமுகம் சிபாரிசில், முதலமைச்சர் கருணாநிதி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ்யை அழைத்து, போர்ஜரி ஆவணங்களை காட்டாமல் ஐ.ஏ.எஸ் பதவி உயர்வுக்கு யூ.பி.எஸ்.சி பரிந்துரை செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். போர்ஜரி ஆவணங்களை காட்டாமல், ஜெகந்நாதனுக்கு ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. தற்போது நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றுகிறார். ஜெகந்நாதனுக்கு ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கொடுத்தது தவறு என்று போடப்பட்ட வழக்கில், தற்போது அதாவது தங்கள் ஆட்சியில் ஜெகந்நாதனுக்கு ஆதரவாக அட்வகேட் ஜெனரல் வாதாடினார். தமிழக அரசும் ஆதரவாக செயல்படுகிறது
* 2004-09 மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணிராமதாசு, தமிழ்நாடு எய்ட்ஸில் திட்ட இயக்குநராக பணியாற்றிய எஸ்.விஜயகுமார், துணை இயக்குநராக பணியாற்றிய டாக்டர் ரவிபாபு மூவரும் பல கோடி ஊழல் செய்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே தங்களுக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ஊழல் கோப்புகளை எய்ட்ஸ் அலுவலகத்திலிருந்து வெளியே எடுத்து சென்று, தற்போது திட்ட இயக்குநர் குமார்ஜெயந்த் ஐ,ஏ.எஸ் ஆதரவுடன் அழித்துவிட்டார்கள்.
 
 * டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதில் அப்போது டி.என்.பி.எஸ்.சியின் செயலாளராக பணியாற்றிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தவரும், தற்போது செய்தித்துறை இயக்குநராக இருக்கும் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் இருவரும்தான் முக்கிய குற்றவாளிகள். ஆனால் இருவரை சேர்மனாக இருந்த நட்ராஜ் ஐ.பி.எஸ்(ஒய்வு) அவர்கள்
 
 காப்பாற்றிவிட்டார்.
 
  * கடந்த திமுக ஆட்சியில் சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, ரத்தத்தை சுத்தப்படுத்தும் டயாலிஸ் மெஷின், ரூ3.50 கோடி மதிப்பில் 17 வாங்கப்பட்டது. ஆனால் ஒரு டயாலிஸ் மெஷின் கூட வேலை செய்யவில்லை.. இது தொடர்பான கோப்புகள் காணாமல் போய்விட்டதாம்.
 
 * வி
ல்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  ராமாவரத்தில் வீட்டுவசதிவாரியத்துக்கு சொந்தமான 2.28 ஏக்கர் நிலத்தை வள்ளியம்மை அறக்கட்டளை ஆக்ரமித்துள்ளது. இந்த இடத்தை 2006 ஜனவரியில் தாங்கள் முதல்வராக இருக்கும் போது ஆக்ரமிப்பிலிருந்து கையகப்படுத்த உத்தரவிட்டீர்கள். ஆனால் அந்த உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
 
  * தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அஷிஷ்குமார் ஐ.ஏ.எஸ், தன்னுடைய மகன் பிறந்தநாளை 27.4.13 அன்று மிகவும் ஆடம்பரமாக கொண்டாடினார். பிறந்தநாளில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களின் மதிப்பு ரூ20 கோடி.
 
  * திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்து கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூலக கட்டிடம் கட்டிய போதும், பொதுப்பணித்துறையில் கண்காணிப்பு பொறியாளராக இருந்த கோபாலகிருஷ்ணன், தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். அவர் 2012ம் ஆண்டு மேமாதம் ஒய்வு பெற வேண்டும், அப்போது தலைமை செயலாளராக இருந்த தேபேந்திராநாத் சாரங்கி ஐ.ஏ.எஸ் அவர்களின் மகன் திருமண செலவுகளை கவனிப்பதற்காக, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்(கட்டிடம்) தலைமை செயலாளர் 
தேபேந்திராநாத் சாரங்கி ஐ.ஏ.எஸ் பரிந்துரையின் பேரில் ஒராண்டு பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. பதவி நீட்டிப்பு கோப்பில் பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ், கோபாலகிருஷ்ணன் தொடர்பான முழுவிவரங்களை கோப்பில் சொல்லாமல், தாங்களிடம் கையெழுத்து பெற்றார்கள்.. ஆனால் ஒராண்டு காலமாக பொதுப்பணித்துறை ஊழலில் சிக்கி தவிக்கிறது.
 
         
 
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாய்த்துத்தலைவராக இருக்கும் சின்னதுரை, அதிமுகவை சேர்ந்தவர். 2006-11ல் சின்னதுரை மாவட்ட பஞ்சாய்த்துத்தலைவராக இருந்த போது, பொதுப்பணித்துறையில் செய்து முடிக்கப்பட்டு, பில் பட்டுவாடா செய்யப்பட்ட வேலைக்கு, மாவட்ட பஞ்சாய்த்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்தது போல், போலி பில் போட்டு எடுத்துவிட்டார். இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்
 ராசாமணி விசாரணை செய்து, ரூ2 கோடிக்கு ஊழல் நடந்ததை கண்டுபிடித்து, அறிக்கை கொடுத்தார். ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த என்.எஸ்.பழனியப்பன் ஐ.ஏ.எஸ் இருவரும் அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காமல், முடக்கிப்போட்டார்கள். அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்தால் கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த துரைமுருகன், மு.க.ஸ்டாலின் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்பதால், தலைமை செயலாளராக இருந்த தேபேந்திராநாத்சாரங்கி ஐ.ஏ.எஸ், ஆலோசனையில் பேரில் கோப்புக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது. ஆனால் அந்த கோப்பு நிலை ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக சி.வி.
சங்கர் ஐ.ஏ.எஸ் அவர்கள் பொறுப்புக்கு வந்த பிறகு அதே நிலைதான் நீடிக்கிறது.
 
 தமிழக அரசில் அதிகாரிகளின் நிலை இப்படிதான் இருக்கிறது. ஆனால் தாங்கள் முன்பு, ஊழல் இல்லாத, நேர்மையான அரசு நடப்பதாகவும், திட்டங்கள் அடிதட்டு மக்களை போய் சேருவதாக தவறான புள்ளிவிவரஙக்ளை கொடுத்து அதிகாரிகள் நடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 
 
      இந்த வெளிப்படை கடிதம், மாண்புமிகு முதல்வர் அவர்கள் பார்க்க வாய்ப்பு இருக்குமா என்பது மக்கள்செய்திமையத்தால் உறுதி செய்யமுடியவில்லை. ஆனால் இந்த கடிதத்தின் அடிப்படையில் மக்கள்செய்திமையத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.
 
 மூத்த பத்திரிகையாளர் என்பதால், தமிழகத்தில் சரித்திர சாதனை புரியும்  மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உண்மையை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்பதால் இந்த கடிதம் தங்களுக்கு அனுப்பி உள்ளேன். இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களுக்கு ஆதாரம் உள்ளது.
 
 தமிழகத்தை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்ற துடிக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மீண்டும் மக்கள்செய்திமையம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 நன்றியுடன்
 
வி.அன்பழகன், மூத்த பத்திரிகையாளர் 

 

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்