ஒன்பது நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம்: சென்னையில் வரும் 15-ல் தொடக்கம்

செவ், 02/12/2013 - 07:28 -- Velayutham

 

பூடான், சீனா உள்பட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம், சென்னையில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இரண்டு நாட்கள் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
 
ஜெனீவா நகரத்தில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
 
இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்க சீனா, பூடான், மாலித்தீவுகள், அர்ஜென்டினா, பியூஜித் தீவுகள், நாரு மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
 
Undefined
Tags: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்