புதுதில்லியில் ராஜ்நாத்சிங்குடன் ஜெகதீஷ்ஷெட்டர் சந்திப்பு

திங், 01/28/2013 - 19:25 -- Velayutham

புதுதில்லியில் ராஜ்நாத்சிங்குடன் ஜெகதீஷ்ஷெட்டர் சந்திப்பு

 

புதுதில்லியில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் சந்தித்து, கர்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதித்தார்.
 
எடியூரப்பா ஆதரவு 13 பாஜக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் நேற்று இரவு ஹூப்ளியில் இருந்து புதுதில்லி வருகைதந்தார். இன்று காலை 10 மணிக்கு பாஜகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ்நாத்சிங்கை சந்தித்து, மலர்கொத்து கொடுத்து ஜெகதீஷ்ஷெட்டர் வாழ்த்தினார். இதை தொடர்ந்து இருவரும் அரைமணி நேரம் தனியாக பேசினர். .சந்திப்புக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங்,"கர்நாடக அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாஜக அரசு தனது முழு ஆட்சிகாலத்தையும் நிறைவுசெய்யும்" என்றார்.
 
ஜெகதீஷ்ஷெட்டருக்கு ஆலோசனை எதுவும் கூறுகிறீர்களா? என்று கேட்டதற்கு,"ஜெகதீஷ்ஷெட்டருக்கு ஆலோசனை அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஜெகதீஷ்ஷெட்டர், மிகவும் புத்திசாலி, தெளிவானவர் மற்றும் நம்பிக்கையான முதல்வர்" என்றார் ராஜ்நாத்சிங்.
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்