தமிழக காவல் துறை அதிகாரிகள் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

வெள், 01/25/2013 - 10:55 -- Velayutham

 

தமிழக காவல் துறை அதிகாரிகள் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

 

கூடுதல் டிஜிபி-க்கள் சி. சைலேந்திரபாபு, பிரதீப் வி. பிலீப், ஐஜி ஏ.எம்.எஸ். குணசீலன் ஆகியோர் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 24 பேர் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில காவல்துறை, மத்திய படைகள் ஆகியவற்றில் இருந்து 671 பேர் குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக காவல் துறை அதிகாரிகளின் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் பதவி):

சீர்மிகு பணிக்கான பதக்கம்: சி. சைலேந்திரபாபு (கூடுதல் டிஜிபி, கடலோர காவல்படை)

பிரதீப் வி. பிலிப் (கூடுதல் டிஜிபி, குற்றப்பிரிவு)

ஏ.எம்.எஸ். குணசீலன் (ஐஜி, கண்காணிப்பு, ஊழல் தடுப்புத்துறை)

சிறப்புப் பணிக்கான பதக்கம்:

சுமித் ஷரண் (டிஐஜி, திருநெல்வேலி சரகம்)

எம்.டி. கணேசமூர்த்தி (டிஐஜி, வேலூர் சரகம்)

எஸ். சிவானந்தம் (துணை ஆணையர், போக்குவரத்துத் திட்டம்)

எஸ். ராஜசேகரன் (கமாண்டன்ட், 3-வது படையணி, வீராபுரம்)

என். ராஜேந்திரன் (கமாண்டன்ட், 14-வது படையணி, பழனி)

கே. தினகரன் (துணை கமாண்டன்ட், 14-வது படையணி, பழனி)

எஸ்.வி. சுப்பிரமணியன் (துணை கமாண்டன்ட், 8-வது படையணி, புதுதில்லி)

பி. பாலசந்திரன் (துணை கண்காணிப்பாளர், உள்ளுறை பயிற்சிப் பிரிவு, சென்னை)

எஸ். பெருமாள்சாமி (துணை கண்காணிப்பாளர், "கோர் செல்' சிஐடி, சென்னை)

எஸ். இளம்பருதி (துணை கண்காணிப்பாளர், வல்லம்)

என். சம்பத் குமார் (துணை கண்காணிப்பாளர், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, கோவை)

ஜி. தமிழ்செல்வன் (உதவி ஆணையர், தி. நகர் சரகம், சென்னை)

எஸ். பரணி குமார் (துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்புப் பிரிவு)

எஸ். பாஸ்கர் (துணை கண்காணிப்பாளர், கும்பகோணம் உள்கோட்டம்)

கே. மகுடபதி (உதவி ஆணையர், மதுரை போக்குவரத்துப் பிரிவு)

இ. ஜெயச்சந்திரன் (ஆய்வாளர், மதுரை)

கே. அருணாசலம் (ஆய்வாளர், சென்னை)

பி. சந்திரசேகரன் (உதவி ஆய்வாளர், சென்னை)

ஏ. ஆல்வின் அருள்செல்வம் (உதவி ஆய்வாளர், சென்னை பயிற்சிக் கல்லூரி)

கருப்பையா (சிறப்பு உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்புப் பிரிவு, மதுரை)

சம்பத் நாராயணன் (சிறப்பு உதவி ஆய்வாளர், சென்னை)

சிறைத்துறை: என். கோவிந்தசாமி (உதவி ஜெயிலர், வாலாஜா); சி.எஸ்.கே. சுந்தரம் (வார்டர், புதுக்கோட்டை); பி. உஷா தேவி (வேலூர் பெண்கள் பிரிவு).

புதுச்சேரி: சீர்மிகு பணிக்கான பதக்கத்துக்கு ஐஜி ரண்வீர் சிங் கிருஷ்ணியா, சிறப்புப் பணிக்கான பதக்கத்துக்கு முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.ஏ. சஞ்சீவ், காரைக்கால் நகர ஆய்வாளர் ஏ. சிவானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ: தில்லி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு டிஐஜி வே. முருகேசன், சென்னை பிரிவு டிஐஜி செ. செங்கதிர், ஊழல் தடுப்புப் பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளராக உள்ள ராய் அலெக்ஸôண்டர், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் பி.கே. ராகவன் (உதவி இயக்குநர்-சென்னை), சுரேஷ் குமார் (உதவி இயக்குநர்-தில்லி) ஆகியோர் குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்