தமிழ்நாட்டில் வால்மார்ட்டைக் கால்வைக்க அனுமதியோம்: தா.பாண்டியன் அறிக்கை

செவ், 12/11/2012 - 20:12 -- Puthiyavan

சென்னை டிச. 11:-

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழக முதல்வர் ஏற்கெனவே திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். இருந்தும், சென்னை அருகே திருவேற்காட்டில் வால்மார்ட் நிறுவனக்கிளை  ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்   தா.பாண்டியன் பத்திரிக்கைகளுக்கு  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:வால்மார்ட் கம்பெனி கிளை ஒன்றை சென்னைக்கு அருகே  திருவேற்காட்டில் தொடங்குவதற்கான எல்லா முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. உடனடியாக அதன் அனுமதியை ரத்து செய்து அது வெளியேற்றப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கின்றது. அவ்வாறு வெளியேற்றப் படவில்லையென்றால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக மக்களை ஒருங்கிணைத்து தொடர்போராட்டங்களை நடத்தும் என்பதை  தெரிவித்துக் கொள்கின் றோம். 

வால்மார்ட் கம்பெனியின் மோசடித் தனங்கள் உலகம் அறிந்தவை. இக்கம்பெனி யின் தாய் நாடான அமெரிக்காவிலேயே பல மாநிலங்களில் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மானிய உயர்நீதிமன்றமும், நாடாளுமன்றமும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வால்மார்ட்டை அந்த நாட்டை விட்டு விரட்டியுள்ளது. விலைப்போட்டி என்கின்ற மோசமான தந்திரத்தை உருவாக்கி பல வர்த்தக அமைப்புக்களை இந்த நிறுவனம் அழித்துவிட்டது என்பதே ஜெர்மானிய நாட்டின் மேற்கூறிய முடிவுகளுக்குக் காரணமாகும். சுயசார்புடைய இந்திய நாட்டில் வால்மார்ட்டினுடைய ஆக்கிரமிப்பு விரிவாகும் போது அழியப் போவது சில்லரை வர்த்தகம் மட்டுமல்ல. இந்திய விவசாயம், சிறு தொழில், குறுந் தொழில் முதலான அனைத் தையும் அழிக்கும் அபாய திட்டங்களோடு அது வந்துள்ளது. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அபாயத்தை  உணர்ந்து தமிழக மக்கள் அனைவரும்  ஒன்றுபட்டு திருவேற்காட்டில் தொடங்க இருக்கும் வால்மார்ட் கம்பெனியை  உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு தா.பாண்டியன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ்
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்