`நீர்ப்பறவை` திரைப்படத்திற்கு பழ.நெடுமாறன் பாராட்டு!

செவ், 12/11/2012 - 08:49 -- Puthiyavan

 

திரு. சீனு. இராமசாமி அவர்கள்

திரைப்பட இயக்குநர்,

சென்னை.

அன்புள்ள நண்பர் அவர்களுக்கு,

வணக்கம். நலம் நலமே நாடுகிறேன். நீண்ட காலத்திற்குப் பிறகு நல்லதொரு திரைப்படத்தைப்பார்க்கும் வாய்ப்பினை அளித்தமைக்காக தங்களுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்."நீர்ப்பறவை' திரைப்படத்தை ஒரு காவியமாகத் தீட்டியிருக்கிறீர்கள். அக்காவியத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் அந்தப் பாத்திரத்தின் படைப்பு நோக்கத்தை நன்கு புரிந்துகொண்டு சிறப்பாக நடிக்கும் வகையில் அவர்களை இயக்கிய தங்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும். ஈழத்தமிழர் பிரச்சினை உலகறிந்த பிரச்சினையாகி ஐ.நா.விலும் இன்று எதிரொலிக்கத்தொடங்கிவிட்டது. ஆனால், 30 அண்டு காலத்திற்கு மேலாக தமிழக மீனவர்களின் பிரச்சினை இன்னும் தமிழ்நாட்டின் கவனத்தைக்கூட முழுமையாக ஈர்க்கவில்லை. ஆனால் தாங்கள் அந்தப் பிரச்சினையில் துணிவாக கையில் எடுத்துக்கொண்டு அனைவரின் கவனத்தையும் அந்தப் பிரச்சினையின்பால் ஈர்ப்பதற்கு திரைப்படத்தை ஒரு சாதனமாகக் கொண்டு அதை வெற்றிகரமாகவும் கையாண்டிருக்கிறீர்கள். இதுவரை யாரும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை ஒட்டுமொத்த தமிழினத்தின் தேசியப் பிரச்சினையாகவோ அல்லது இந்தியக் குடிமக்களில் ஒரு பகுதியினராக விளங்கும் உழைக்கும் மக்களின் பிரச்சினையாகவோ கருதியதில்லை. அத்தகையவர்களின் சிந்தனையைத் தங்கள் படத்தின் மூலம் தூண்டியிருக்கிறீர்கள்.அத்துடன் சர்வசமயப் பொறையையும் ஒற்றுமையையும் படம் நெடுகப் புகட்டியிருக்கிறீர்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் கனத்த இதயத்துடன் கசியும் கண்களுடன்தான் வெளிவருவார்கள் என்பதில் ஐயமில்லை. அதுதான் தங்களுக்கு கிடைத்த வெற்றியும் மக்கள் அளிக்கும் விருதுமாகும். அனைத்துக்குமாகத் உலகத் தமிழர்களின் சார்பில் தங்களை மனமாறப் பாராட்டுகிறேன்.

படத்தின் நாயகனாக நடிக்கும் விஷ்ணு, நாயகியாக நடிக்கும் சுனைனா, பிற்கால நாயகியாக நடிக்கும் நந்திதா தாசு, படகு முதலாளியாக நடிக்கும் சமுத்திரக்கனி அகியோரும் மற்றவர்களும் அந்தந்தப்பாத்திரங்களாக மாறி முத்திரைப் பொறித்திருக்கிறார்கள் அனைவருக்கும் எனது பாராட்டும் வாழ்த்தும் உரியனவாகும். ஒளிப்பதிவாளரான திரு. பாலசுப்பிரமணியன் மிகச்சிறந்த முறையில் படத்தை பதிவு செய்திருக்கிறார் அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

தமிழக மீனவர்களின் துயரம் மிகுந்த பிரச்சினையை மையமாகக் கொண்ட திரைப்படத்தைத் துணிந்து எடுத்ததுடன் அதில் பெரியதொரு வெற்றியையும் தாங்கள் பெற்றிருப்பது தங்களைப் பெற்றெடுத்த மதுரைக்குப் பெருமையாகும். தமிழர் கலை வளர்த்த தலைநகரான மதுரை தங்களால் பெருமிதம் கொள்கிறது.தமிழ்
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்