சென்னை டிச. 10:-
பள்ளிகளில் எல்.கே.ஜி க்கான சேர்க்கை நடைபெறும் காலம் இது. அநேக பள்ளிகள் ஆன்லைனிலேயே படிவங்களை கொடுத்து பள்ளி சேர்க்கைகளை சுமுகமாக நடத்தி வருகின்றன. இன்னும் சில பள்ளிகள் இதுபோன்ற முறையை கொண்டு வராததால் பெற்றோர்கள் படும் இன்னல் சொல்லி மாளாது. நேற்று மாலை முதலே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எல்/கே.ஜி யில் சேர்பதற்கான படிவத்தை வாங்க கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளியில் கூட தொடங்கிவிட்டனர். இன்று காலை கூட்டம் அதிகமாகி அநேக பெற்றோர்கள் அதிருப்தியில் உள்ளனர். பள்ளிகள் இதுபோன்று கூட்டம் கூடும் என்று தெரிந்தும் அதை தீர்க்காமல் இன்னும் கூட்டத்தை கூட்டி தங்கள் பள்ளிதான் பிரதான பள்ளி என்று தொடர்ந்து பறைசாற்றிக்கொண்டிருக்குமா என்று அங்கு கூடியிருந்தோரின் எண்ணமாக இருந்தது.
தமிழ்
Topic:
புதிய கருத்தை சேர்