தமிழக அரசின் சார்பில் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக 50 லட்சம் ரூபாய்

சனி, 12/08/2012 - 11:12 -- Puthiyavan

 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் 7.12.2012 அன்று  தலைமைச் செயலகத்தில், சென்னையில் நடைபெறவுள்ள 10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக  தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்படத்திறனாய்வுக் கழகத்தின்  பொதுச் செயலாளர் திரு. E. தங்கராஜ் அவர்களிடம் வழங்கினார்கள். 


இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம்  (Indo Cine Appreciation Foundation - ICAF)  2003-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக “சென்னை சர்வதேச திரைப்பட விழா”-வை  டிசம்பர் மாதத்தில் நடத்தி வருகிறது.  இந்த ஆண்டு 10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 12.12.2012 முதல் 20.12.2012 வரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்பட விழாவில் 54 நாடுகளில் தயாரிக்கப்பட்ட  172 திரைப்படங்கள், 8 நாட்களில் 8  திரையரங்குகளில் திரையிடப்படும்.  
 
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் கடந்த   ஆண்டு நடைபெற்ற 9-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள  10-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டைப் போன்றே வழிகாட்டுதலும், ஆதரவும், நிதியுதவியும் அளித்திடுமாறு  இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர்   தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.  


அந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர்   ஜெ ஜெயலலிதா  அவர்கள் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள  10-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய் அனுமதித்து ஆணையிட்டிருந்தார்கள். இந்தத் தொகைக்கான  காசோலையை 7.12.2012  அன்று தலைமைச்செயலகத்தில் இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.  E.  தங்கராஜ் அவர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் வழங்கினார்கள். 

 
இந்நிகழ்வில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான  திரு. ஆர். சரத்குமார், எம்.எல்.ஏ., திரைப்பட நடிகை திருமதி சுஹாசினி மணிரத்னம், இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.  E.  தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அவர்கள்   தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களை  10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவினை தலைமையேற்று நடத்தித் தர வேண்டி கேட்டுக் கொண்டு, இத்திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இருமடங்கு நிதியுதவி வழங்கியமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத்  தெரிவித்துக் கொண்டார்கள்
தமிழ்
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்