கலப்பு திருமண குளறுபடிகள்!

புத, 12/05/2012 - 19:37 -- Reporter

முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை  (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள். அந்த கடிதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம் கலப்புத்திருமணமாக அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே அத்திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகள் இருவரது சாதியில் ஒரு சாதியை சேர்ந்ததாக சான்றிதழ் பெற முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறதாம்.

மக்கள்செய்திமையம், சில நாட்களுக்கு முன்பு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் பிற்டுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெற்ற திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு சாதி சான்றிதழ் தொடர்பாக கேட்ட தகவலுக்கு அனுப்பிய கடிதத்தை அப்படியே வெளியிட்டு உள்ளோம்.

2001லிருந்து கடந்த 11 ஆண்டுகளாக, இந்த கோப்பு அரசின் பரிசீலனையின் உள்ளதாம்  இந்த நிலையில் அரசின் செயல்பாடுகள் உள்ளது.

தகவல்: மக்கள் செய்தி மையம்

Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்