வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் "நீலம்" புயல் குறித்து ஆய்வுக்கூட்டம்

செவ், 11/06/2012 - 00:36 -- Reporter

சென்னை நவ. 5:-

போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு. ‘தோப்பு’ என்.டி. வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் 
வடகிழக்கு பருவமழையினை தொடர்ந்து வங்காளவிரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.  ‘நீலம்’ என்று பெயரிடப்பட்ட புயலானது கடந்த 31.10.2012 அன்று மாலை சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் கரையைக் கடந்தது.  இப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, நிவாரண உதவிகளை உடடினயாக வழங்கிடுமாறு மாண்புமிகு முதலமைச்சர்  செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
தற்பொழுது நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளின் நிலை குறித்து மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு. ‘தோப்பு’ என்.டி. வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் எழிலகம் சுனாமி கருத்தரங்கக் கூடத்தில் இன்று (05.11.2012) பிற்பகல் 5.00 மணியளவில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வருவாய்த்துறை முதன்மைச் செயலர் திரு. ராஜீவ் ரஞ்சன்,இ.ஆ.ப., முதன்மைச்செயலர் (ம) வருவாய் நிருவாக ஆணையர் (பொ) திரு. யத்தீந்தர நாத் ஸ்வேன், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை கூடுதல் ஆணையர் (ம) சிறப்புப் பணி அலுவலர் திரு.ஆஷிஷ் சாட்டர்ஜி, இ.ஆ.ப.,இணை ஆணையர் வருவாய் நிர்வாகம் முனைவர் மு. ஜெயராமன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜெ. ஜெயகாந்தன்,  சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அன்பழகன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. விசாகன், விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர். பிருந்தா,  மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வி. லீலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் தமது உரையில்,  ‘தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை மற்றும் நீலம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில்  மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மற்றும் உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதுவரையில்  65 நபர்கள்  உயிர் இழந்துள்ளனர்.  862 கால்நடைகள்  உயிர் இழந்துள்ளன (362 மாடுகள், 126 கன்றுகள், 374 ஆடுகள்) 785  குடிசைகள் முழுமையாகவும், 3,836 குடிசைகள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.   அந்தந்த மாவட்டங்களில் நிவாரண உதவிகள் போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சேதமடைந்துள்ள பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வருவாய்த்துறையின் பணிகள்  குறித்து  அண்மையில்,  அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் கலந்து  கொண்ட ஆய்வுக்கூட்டத்தில், பேரிடர் காலங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களை அர்ப்பணித்து பணியாற்றிட வேண்டுமாறு நான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வருவாய்த்துறை அலுவலர்கள் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பணியாற்றியதன் பயனாக, கடந்த நீலம் புயலினால் பாதிக்ப்பட்ட பகுதிகளில் எங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை இன்று நான்  பார்வையிட்டேன்.நிவாரணப்பணிகளும், நிவாரண உதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.  எஞ்சியுள்ள நிவாரணப்பணிகளையும், நிவாரண உதவிகளையும் விரைந்து வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறை அலுவலர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்