பிரதீபா காவேரி கப்பலை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவு

வெள், 11/02/2012 - 22:30 -- Reporter
சென்னை.

நிலம் புயல் காரணமாக சென்னை கடற்கரைக்கு அருகே தரை தட்டிய பிரதீபா காவேரி கப்பலை முடக்கி வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதனன்று டீசல் தீர்ந்துவிட்ட நிலையில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பிரதீபா காவேரி கப்பல் நிலம் புயல் காரணமாக சென்னைக்கு அருகே தரைதட்டி நின்றது.இதில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாலுமிகள் கடலில் குதித்துத் தப்பிக்க முயன்றனர். இவர்களில் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 4 பேர் உயிரிழந்தனர். இருவரது நிலை என்னவானது என்று தெரியவில்லை.

உயிரிழந்தவர்களில் ஒருவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், 

கப்பலில் பணியாற்றி உயிரிழந்த மாலுமிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரியும், கப்பல் தரை தட்டியது குறித்து நீதி விசாரணை நடத்துமாறும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து 6ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், பிரதீபா கப்பலை முடக்கி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.கப்பல் சென்னைக்கு அருகே மண்ணில் நன்கு புதையுண்டிருப்பதால், அதனை மீட்கும் கப்பல் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த கப்பல் நாளை சென்னை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அந்த முயற்சி பலனளிக்காத பட்சத்தில், கப்பலை உடைத்துத்தான் அப்புறப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்