அகில இந்திய காவல்துறை ரைபிள் போட்டியில் கோப்பையை வென்ற காவல் துறையினருக்கு முதல்வர் வாழ்த்து

வெள், 10/19/2012 - 03:31 -- Reporter


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,


ஓடிசா மாநிலம், ஜஜ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற 13-வது அகில இந்திய போலீஸ் ரைபிள் மற்றும் ரிவால்வர் / பிஸ்டல் சுடும் போட்டி 2012-ல் (13th All India Police Rifle & Revolver / Pistol Shooting Competition 2012) முதல் இடத்தைப் பெற்று கோப்பையை வென்ற தமிழக காவல்துறையினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று, தலைமைச் செயலகத்தில், சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார்கள். அண்மையில் ஒடிசா மாநிலம், ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோலார் சுடு பயிற்சி தளத்தில் அக்.,3 முதல் அக்.,7ம் தேதி வரை நடைபெற்ற 13-வது அகில இந்திய போலீஸ் ரைபிள் மற்றும் ரிவால்வர் / பிஸ்டல் சுடும் போட்டி 2012-ல் (13th All India Police Rifle & Revolver / Pistol Shooting Competition 2012) 23 மாநில அணிகள் மற்றும் 8 துணை ராணுவ அணிகள் பங்கேற்றன.


இதில் தமிழ்நாடு காவல் துறையிலிருந்து காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் தமிழ்செல்வன் தலைமையிலான 32 பேர் கொண்ட தமிழக காவல் துறையினர் ஒட்டுமொத்த மாநிலங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதல் இடத்தைப் பெற்று கோப்பையை வென்றார்கள்.


மேலும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6ம் அணியைச் சேர்ந்த அவில்தார் ராஜகுரு கைத்துப்பாக்கி தாக்குதல் (Pistol Attack) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். 13-வது அகில இந்திய போலீஸ் ரைபிள் மற்றும் ரிவால்வர் / பிஸ்டல் சுடும் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவல்துறை அணியினர் முதலமைச்சரை நேற்று, தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


அப்போது, முதலமைச்சர் அவர்கள், இனி வரும் காலங்களிலும் தமிழக காவல் துறையினர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகள் பல பெற வேண்டும் என்று வாழ்த்தி, தனது பாராட்டுதல்களை தெரிவித்தார்.  இந்நிகழ்வின் போது, உள்துறை முதன்மைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்