அடுத்த 5ஆண்டுகளில் 58 விண்வெளி திட்டங்கள்:இஸ்ரோ முடிவு

ஞாயி, 10/07/2012 - 17:53 -- Reporter
புதுடில்லி: 
 
12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் 58 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. 
 
மேலும் செவ்வாய், மற்றும் நிலவிற்கும் செயற்கை கோள்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் அகன்ற அலைவரிசையில்,தொலைதொடர்பு செயற்கை கோள்கள், மற்றும் டி.டி.எச்.சேவைக்காக , டிரான்பாண்டர்கள் அதிகளவில் தேவைப்படுகிறது. இதற்காக ரூ. 39 ஆயிரத்து 750 கோடி செலவில் அடுத்த 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 58 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். மேலும் செவ்வாய்,நிலவிற்கும் விண்கலம் செலுத்தப்பட உள்ளது.அது மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க பிரத்யோகமாக 500 டிரான்ஸ்பாண்டர்களுடன் செயற்கை கோள்களை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்திற்கு கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. இவ்வாறு இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது
Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்