காந்தி ஜெயந்தி : பேரணி, கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு அரசு ஏற்பாடு

திங், 10/01/2012 - 19:20 -- Reporter
சென்னை
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சைக்கிள் பேரணி, காந்தி கண்காட்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் காந்தி ஜெயந்தி என்பதால், நாளை காலை ஆளுநர் ரோசய்யா மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

காலை 10.15 மணிக்கு மெரினா கடற்கரை அருகே உலக அமைதியை வலியுறுத்தும் மிதிவண்டிப் பேரணியும், 11.30 மணிக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கிடும் கண்காட்சித் திறப்பு விழாவும் நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், காந்தியடிகளின் 144வது பிறந்த நாள் விழா ஆளுநர் ரோசய்யா தலைமையில் நடைபெற உள்ளது.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்