மகாத்மா காந்தி 143-வது பிறந்த நாள்: தலைவர்கள் மலரஞ்சலி

செவ், 10/02/2012 - 14:30 -- Reporter

 புதுடில்லி:

மகாத்மா காந்தியின் 143 வது பிறந்த நாளையொட்டி, ஜனாதிபதி , பிரதமர் மற்றும் தலைவர்கள் பலர் அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்தினார். இன்று மகாத்மா காந்தியின் 143-வது பிறந்த நாள் நாடெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், 
காங். தலைவர் சோனியா உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சுஷீல்குமார் ஷிண்டே, ஏ.கே. அந்தோணி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோரும் காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். 
இந்நிகழ்ச்சியில் விடுதலை பேராட்ட தியாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்