புதிய கருத்தை சேர்

விநாயகர் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் மாநகர காவல்துறை அறிவிப்பு

திங், 09/09/2013 - 10:20 -- Velayutham
Undefined
 
சென்னை செ 9
 
விநாயகர் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
 
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
சென்னையில் 1702 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.இது தவிர ஆயிரக்கணக்கான சிறிய சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட உள்ளன. வீடுகளிலும் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொது மக்கள் பூஜை செய்வார்கள். இந்த சிலைகள் ஒரு வாரத்துக்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.சென்னையில் வருகிற 15 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் ராமகோபாலன் பங்கேற்கிறார்.
 
மற்ற இந்து அமைப்புகள் சார்பில் 4 நாள்கள் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. சென்னையில் பெரிய சிலைகள் நிறுவப்படும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திங்கள்கிழமை முதல் அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்படும் வரை சுமார் ஒரு வார காலத்துக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.முக்கிய சாலைகளில் விநாயகர் சிலை அமைப்பவர்களுக்கு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்பவர்கள் தங்களுக்குள் ஒரு கமிட்டியை ஏற்படுத்தி போலீஸாருடன் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் விழா கமிட்டியைச் சேர்ந்த இருவர், சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.எளிதில் தீப்பிடிக்கக் கூடிய ஓலைக் கொட்டகைகள் போன்றவற்றை அமைக்க கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அனுமதிக்கப்பட்ட சாலை வழியாக மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். மாட் வண்டிகளில் சிலைகளை எடுத்துச் செல்லக் கூடாது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்து முன்னணி ஊர்வலம் நடைபெறும்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பதற்றமான ஒரு சில பகுதிகளிலும் விநாயகர் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஜார்ஜ் 2 முறை ஆலோசனை கூட்டங்களை நடத்தி போலீசாருக்கு பாதுகாப்பு தொடர்பாக வழக்கபோல் அறிவுரைகளை வழங்கினார்.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்