புதிய கருத்தை சேர்

எம்.பி.பி.எஸ்: 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

செவ், 05/21/2013 - 09:19 -- Velayutham
Undefined

 

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் கூறினார்.
 சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 836 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 909 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க மே 9-ஆம் தேதிமுதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வந்தது. மொத்தம் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
 மே 20 கடைசி: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்க திங்கள்கிழமை (மே 20) கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான திங்கள்கிழமை வரை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
 கலந்தாய்வு எப்போது? எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்)-ரேங்க் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு தொடங்கும் தேதி ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
 

 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்