2015

மோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்

ஞாயி, 08/30/2015 - 15:30 -- Velayutham
மோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்

மோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம் பாட்னா, ஆக. 31 மோடியின் அரசு மக்கள் விரோத அரசு என்று சோனியா பேசினார். பீகாரில் முதல்–மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 29–ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ஒரு அணியும், பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும் உருவாகியுள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பலமுனை போட்டி நிலவியது. முதல் முறையாக இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த தேர்தல் விறுவிறுப்பை எட்டியுள்ளது.

Undefined

அதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்

சனி, 08/29/2015 - 22:59 -- Velayutham
அதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்

அதிமுக அமோக வெற்றி பெறும்
மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்

சென்னை, ஆக, 30

தமிழ்நாட்டின் மாநில அளவில் மக்கள் ஆய்வு நடத்திய கருத்துகணிப்பில் வரும் 2016 ம் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு அதிகரித்து வருவதாகவும், திமுக தலைவர் கருணாநிதியின் செல்வாக்கு சரிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ள 80 சட்டமன்ற தொகுதிகளில் வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் அடங்கிய மக்கள் ஆய்வு குழுவினர் பேராசிரியர் ராஜநாயகத்தின் வழிநடத்துதலில்படி கருத்து கணிப்பில் ஈடுபட்டனர். மக்களை நேரடியாக பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளை அடிப்படையாக வைத்தும், அப்பிரச்சனைகளை திறமையுடன் கையாண்டு, தீர்வு காணும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாட்டு முறையினையையும் அடிப்படையாகக் கொண்டு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.
அதிமுகவின் செயல்பாடு:
தமிழகத்தில் அளவிலாது இருந்த மின் தட்டுப்பாட்டை போக்க ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 65.1 சதவீதத்தினர் நன்று எனவும், பொது விநியோக திட்டங்களில் ஒழுங்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என 63.9 சதவீதத்தினரும், மக்கள் நலதிட்ட செயலாக்கம் சிறப்பாக உள்ளதாக 51.9 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். மக்கள் ஆய்வு குழுவினர் 2014 ம் ஆண்டு நடத்திய கருத்து கணிப்போடு ஒப்பிடுகையில் அதிமுகவில் சில அம்சங்களில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வேறு பல அம்சங்களில் குறிப்பிட தகுந்த அளவில் எந்த மாற்றமும் நிகழாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை 89 சதவீதத்தினர் வரவேற்று உள்ளனர். திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 73.6 சதவீதத்தினரை கவர்ந்து உள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மடிக்கணினி திட்டத்தை 72.8 சதவீதத்தினர் பாராட்டியுள்ளனர், முதியோர் உதவித் தொகை திட்டத்தை 69.7 சதவீதத்தினரும் வரவேற்று உள்ளனர், மலிவு விலை அம்மா உணவகத்தின் செயல்பாட்டினை 56.2 சதவீத்தினரையும் கவர்ந்துள்ளதாக அக்கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக அரசின் செயல்திறன் :
அதிமுக அரசு பொறுப்பேற்ற 2011 மே முதல் 2014 செப்டம்பர் வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக 59.1 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். பின் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தமிழக அரசின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை எனவும் தற்போது மீண்டும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு மீண்டும் அரசின் செயல்பாடுகள் திருப்திகர அளவை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2016 சட்ட மன்ற தேர்தல் வரை ஜெயலலிதாவின் தற்போதைய அணுகுமுறையே தொடர்ந்தால் பெருவாரியான இடங்களை வென்று அதிமுக ஆட்சியை தக்கவைக்கும் என 24.7 சதவீதத்தினரும், அதிமுகவுக்கும் திமுகவிக்கும் இடையே கடும் போட்டி நிலவும், கூட்டணி பலத்தை பொருத்தே முடிவு அமையும் என 26.2 சதவீதத்தினரும், திமுக வுக்கு ஆட்சி அமைக்கும் அளவு பெரும்பாண்மை கிடைக்காவிட்டாலும் அதிமுகவை விட அதிக இடங்களை வெல்லும் என 22.6 சதவீதத்தினரும், திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என வெறும் 8.3 சதவீதத்தினர் மட்டுமே தெரிவித்துள்ளதாக அம்முடிவுகள் அமைந்துள்ளன.
கூட்டணி மாறும் கட்சிகள் :
தேர்தலுக்கு தேர்தல் அரசியல் கட்சிகள் அணியை மாற்றி கூட்டணி வைத்துக் கொள்ளும் போக்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசியலில் இது சகஜம், பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என 58.1 சதவீதத்தினரும், கூட்டணிக் கட்சிகளின் அணுகுமுறைகளில் முரண்பாடுகள் வரும்போது அணிமாறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என 17.4 சதவீதத்தினரும், அரசியல் கட்சிகளுக்கு கொள்கை முக்கியமல்ல தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு என 12.8 சதவீதத்தினரும், அடிக்கடி அணி மாறும் கட்சிகளைத் தடைசெய்வது நல்லது என 8.2 சதவீததினரும் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியும் சமீபத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து இரு கட்சிகளின் கூட்டணிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என 37 சதவீதத்தினரும், அதற்கான சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாதென 23.1 சதவீதத்தினரும், கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லையென 13.9 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் முதல்வராக ஜெயலலிதா:
தற்போதைய அரசியல் சூழ்நிலையே தொடர்ந்து நீடித்தால் 2016 ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுக்கே அதிகப்படியான வெற்றி வாய்ப்பு இருப்பதாக 34.1 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர் அதற்கு அடுத்த படியாக திமுகவிற்கு 32.6 சதவீதம் வாய்ப்பும், தேமுதிகவிற்கு 4 சதவீத வாய்ப்பும், பாமாகவிற்கு 3 சதவீத வாய்ப்பும் இருப்பதாக அக்கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கருணாநிதி செல்வாக்கு சரிகிறது :
அரசியல் கட்சித்தலைவரின் தகுதி, திறமை, வாய்ப்பு அடிப்படையில் எந்த தலைவருக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான செல்வாக்கு உள்ளது என அறியப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா 31.56 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தும், யாரும் எதிர் பார்க்காத வகையில் திமுக கருணாநிதி 21.33 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திற்கும் அவருக்கு முன்னோடியாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஸ்டாலின் இரண்டாம் இடத்திலும் உள்ளார். இந்த முடிவை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது மக்கள் மத்தியில் கருணாநிதியின் செல்வாக்கு சரிவடைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Undefined

பொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.

திங், 01/12/2015 - 19:18 -- Velayutham
பொங்கல் பண்டிக்கைக்கு  அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.
சென்னை 13.
 
 
பொங்கல் பண்டிக்கைக்கு  அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும் என்று
அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று  கூட்டுறவுத்துறை அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ  தலைமையில்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அத்தியாவசியப்
பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்குதடையின்றி வழங்குவது குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 
Undefined

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்

திங், 01/12/2015 - 19:14 -- Velayutham
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற  தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்
 
 
 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். 
 
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில்  ஜல்லிக்கட்டை நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றும், இதற்காக மத்திய அரசுடன் தமிழக குழு டெல்லி செல்லும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் மத்திய அரசுடன் பேச நேற்று தமிழக கால்நடைத்துறை செயலாளர் விஜயகுமார்.இயக்குநர் ஆபிரகாம்.துணை இயக்குநர் ஆயூப்கான் உள்ளிட்ட அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.
Undefined

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம். ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை.

ஞாயி, 01/11/2015 - 23:26 -- Velayutham
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம். ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம் செய்து ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை செய்துள்ளது.
இது குறித்து ஐஸ்வர்யா மருத்துவமனையின் டாக்டர் சந்திரலேகா  சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கோவையை சேர்ந்த 32 வயது அனிதா கடந்த ஆறு ஆண்டுகளாக கருத்தரிக்காமையினால்
பாதிக்கப்பட்டிருந்தார்..குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு எங்களிடம் வந்தார்,திருமணம்
நடைபெற்று ஒரு ஆண்டுக்குள் பெர்ஜர் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிறு நீரகங்களில் கழிவுககைச் சுத்தம்
Undefined

ராஜபாளையம் நகராட்சியில் 150 வாகனங்கள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மற்றும் திடக்கழிவுகள் அகற்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

ஞாயி, 01/11/2015 - 23:15 -- Velayutham
ராஜபாளையம் நகராட்சியில் 150 வாகனங்கள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மற்றும் திடக்கழிவுகள் அகற்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
 
 
 
இது குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
 
 
ராஜபாளையம் நகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் நகராட்சி நிர்வாகமானது நகராட்சி
நிர்வாகத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி முழு வீச்சில்
போர்கால அடிப்படையில் தூய்மையற்ற குப்பைகள், மண் கழிவுகள், ஆக்கிரமிப்புகள், சுகாதார கழிவுகள்,
கால்வாய் தூர்வாருதல், தேவையற்ற பள்ளங்களை மூடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Undefined